Team ReadMe
2 Min Read

நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் பாவிக்கதவரா? அப்படியானால் இந்தபதிவு உங்களுக்கானது இல்லை…

இன்றைய உலகில் இந்த ஸ்மார்ட் போன் ஒரு மிகப் பெரிய புரட்சியைஉருவாக்கியுள்ளது. பல்வேறு வகையான Apps மூலமாக எங்களால்பல தரப்பட்ட வேலைகளை ஸ்மார்ட் போன் மூலமாக செய்ய முடியும். உதாரணமாக முதல் முதலாக நீங்கள் கொழும்புக்கு செல்கின்றீர்களா? எந்த பேருந்து எங்கு செல்லும் என்று தெரியாதா? கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கின்றது Colombo bus route

அடுத்து உங்கள் குழு வெவ்வேறு இடங்களில் உள்ளதா? நீங்கள் செய்யும் வேலைகளை உங்கள் குழுவிடம் பகிர வேண்டுமா? பயன்படுத்துங்கள் Asana!

சரி, இவ்வாறான அப்ப்ஸ் எத்தனை உள்ளது, எங்கு உள்ளது, அல்லாவிடில் நாங்களாகவே இவ்வாறான அப்ப்ஸ் இணை எழுத வேண்டுமா என்கின்ற கேள்வி உங்கள் மனதில் தோன்ற கூடும்.

இதற்கான விடை GOOGLE PLAY மற்றும் APP STORE லும் உள்ளது. இவை இரண்டிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் Apps உள்ளது WOW. 2மில்லியன் Appsகளில் நீங்கள் எத்தனையை உங்கள் வாழ்நாளில் பயன்படுத்த போகிறீர்?

இப்பொழுது உங்களுக்கு ஒரு என்டேர்டைன்மென்ட் Appதேவைப்படுகிறது. ஆனால் உங்களுக்கு ஒரு தெளிவான முடிவு இல்லை. அப்ப என்ன செய்யலாம்? இதுக்கும் GOOGLE PLAY மற்றும்APP STORE ஒரு வழி தருது. நீங்க பிரிவு பிரிவா தேட முடியும். உதாரணமாக Entertainment, Games, Education.

எத்தனை அருமையான Apps பற்றி நீங்க கேள்விப்பட்டது கூடஇல்லை. உங்களுக்கு பிடிச்ச ஓரு App பற்றி மத்தவங்களுக்கு தெரியுமா? இப்ப தெரிய வைக்குற நேரம் வந்திருச்சு. எடிசலட் மற்றும் ReadMe உடன் சேர்ந்து உங்களுக்கு பிடித்த App பற்றி உலகுக்குஅறிய செய்வோம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உங்களிற்கு பிடித்த ஒரு App பற்றி ஒரு இரண்டு நிமிடகாணொளியை Camcorders மூலமாகவோ அல்லது Webcams மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும்.அந்த கானொளியில் அந்த Appன் சிறப்புகளை விளக்க வேண்டும்.

கீழ்வரும் விருதுகளை பெற நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்று தான். அது கானொளியில் அந்த Appன் சிறப்புகளை விளக்கவேண்டும்.

1. Best app review – Overall competition best review
2. Best local app review – Apps created by local developers
3. Most popular app review – Through audience voting system
4. Best Android app review – Downloaded from Google Play
5. Best iPhone app review – Downloaded from App Store

சிறந்த விமர்சனங்கள் நடுவர் குழாமால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், Most popular app review பார்வையாளராலும் தெரிவுசெய்யப்படும். இப்போட்டியில் கலந்து கொண்டு சில ஸ்மார்ட்போன்களை வீடு கொண்டு செல்லும் வாய்ப்பை பெறுக. இப்போதுஉங்கள் திறமையை காட்டுங்கள்

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings